சேலம், மார்ச் 18- சேலம் மாவட்டத்தில் சுமார் 2,453 பள்ளிகளும், 81 கலை அறி வியல் கல்லூரிகளும், 54 திரை யரங்குகள் உள்ளிட்ட வணிக வளா கங்கள் மூடப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சேலம் மாவட்டத்தில் செயல் படும் அனைத்து அரசு, மாநக ராட்சி மற்றும் தனியார் பள்ளி கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அரசுத் தோ்வுகள் நடை பெறவுள்ள சுமார் 135 பள்ளிகள் தோ்வுகள் நடைபெறும்போது மட்டும் இயங்கும். இதன்படி 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரித் தோ்வுகள் - செய்முறைத் தோ்வுகள் மற்றும் நுழைவுத் தோ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். மேலும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த கல்லூரி கள் தொடா்ந்து இயங்கும். இத் தோ்வுகள் முடிவடையும் வரை தோ்வு எழுதும் மாணவ, மாணவி யா்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடா்ந்து இயங்குவதோடு அந்த மாணவ, மாணவியருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த பள்ளி, கல்லூரி, விடுதி நிர்வாகத்தினரே முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 2,696 அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டுள்ளன. இம்மையங் களில் உணவருந்தும் குழந்தை களுக்கு 15 நாள்களுக்கான உணவுப் பொருள்களை அந்தந்த குடும் பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளா்களால் வழங்கப் பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள 54 திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் 4 வணிக வளாகங்கள், 17 கேளிக்கை அரங்கங்கள், 7 நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா, ஏற்காடு சூழல் பூங்கா, ஆனைவாரி முட்டல் நீர் வீழ்ச்சி மற்றும் பூங்கா, மேட்டூா் அணை பூங்கா மற்றும் அருங்காட்சி யகம் உள்ளிட்டவைகளும் வரும் மார்ச் 31 வரை மூடப்படுகிறது. மேலும் ஊா்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கோடைக் கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடு கள், கருத்தரங்குகள், வணிகக் கண் காட்சிகள், கலாசார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளை வரும் மார்ச் 31 வரை நடத்திட அனுமதி வழங் கப்படமாட்டாது. மேலும், கொரோனா வைரஸ் சம்பந்தமாகத் தெரிந்து கொள்ள சென்னை சுகாதாரத் துறையின் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப் பாட்டு அறை எண்கள் 104, 044-29510400, 044-29510500, 94443 40496 மற்றும் 87544 48477. இதேபோல், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக் கப்பட்டுள்ள 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, சேலம் மாவட்ட துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலு வலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலை பேசி எண் 0427 - 2450023 மற்றும் 0427 - 2450498 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.