ரயில்வே பாதையில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் காப்பாற்றப்படும் காட்டு யானைகள்..!
கோவை மாவட்டத்தில் பெரிய நாயக்கன்பாளையம், கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, சிறு முகை, மேட்டுப்பாளையம், கார மடை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இதில், மதுக்கரை வனச் சரகம் மொத்தம் 694 சதுர கி.மீ பரப் பளவில் அமைந்துள்ளது. இப் பகுதியில் சுமார் 200 காட்டுயானை கள் உள்ளன. கோவையிலிருந்து கேரளம் மாநிலத்திற்கு போத்த னூர், மதுக்கரை, வாளையாறு பகு திகள் வழியாக இயக்கப்படும் ரயில்கள், மதுக்கரை வனப்பகுதி வழியாக செல்கிறது. ரயில்கள் வந்து செல்ல “ஏ”, “பி” என இரண்டு ரயில் பாதைகள் அமைக் கப்பட்டுள்ளன. அதில் “ஏ” ரயில் பாதை 2.9 கிலோமீட்டர் தூரமும், “பி” ரயில் பாதை 4.15 கிலோ மீட் டர் தூரமும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன. இந்த ரயில் பாதைகளில் தினமும் சுமார் 130 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின் றன. இதனால் வனப்பகுதியி லிருந்து ரயில் தண்டவாளங்களை கடக்க வரும் காட்டு யானைகள், ரயில் மோதி உயிரிழக்கும் சம்ப வங்களும் நடைபெற்று வந்தது. கடந்த 20 ஆண்டுகளில் 35 காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந் துள்ளன. இதனால், ரயில் மோதி யானை கள் உயிரிழப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில், வனத்துறை மற்றும் ஒன்றிய ரயில்வே துறை இணைந்து, வாளையாறு - எட்டிமடை இடையே இரண்டு இடங்களில் காட்டு யானைகள் எளிதில் கடந்து செல்ல வசதியாக சுரங்கப் பாதை கள் அமைக்கப்பட்டன. அதோடு தமிழ்நாடு அரசின் வனத்துறை சார்பில், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் காட்டு யானைகள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து எச்சரிக்கும் வகை யில் புதிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. மொத்தம் 12 கோபுரங்கள் அமைக்கப்பட்டு, 24 செயற்கை நுண்ணறிவு கேமராக் கள் பொருத்தப்பட்டுள்ளன. யானைகள் ரயில் தண்டவாளத் திற்கு அருகே வரும்போது கட்டுப் பாட்டு அறை மூலம் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கும், வனத்துறையினருக்கும், லோகோ பைலட்டுக்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இத னால் ரயிலை இயக்கி வரும் லோகோ பைலட் ரயிலின் வேகத்தை குறைத்து விபத்தை தவிர்க்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட் டுள்ளது. மேலும், கடந்த 2023 மார்ச் முதல் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளது. கடந்த 2024 ஜனவரி முதல் 2025 மே வரையிலான 17 மாதங்களில் 1,278 முறை காட்டு யானைகள் ரயில்வே தண்டவாளத்தை பாதுகாப்பாக கடந்து சென்றது தெரியவந் துள்ளது. இந்த காலக்கட்டத்தில் ரயில் விபத்துகளில் சிக்கி யானை கள் உயிரிழப்பு நிகழவில்லை என் பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுக்கரை வனச்சரகத்திற் குட்பட்ட இந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தை 17 மாதங் களில் 32 காட்டு மாடுகள், 9 சிறுத்தைகள், 22 மான்கள் கடந்து சென்றதும் அங்கு பொருத்தப் பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கேமராவில் பதிவாகி இருந்தது. காட்டு யானைகள் ரயில் மோதி இறக்கக்கூடாது என்பதற்காக வனத்துறை மேற்கொண்ட இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள் ளது. இதே போல் தொண்டாமுத் தூர், தடாகம், மேட்டுப்பாளை யம், சிறுமுகை உள்ளிட்ட வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங் களை சேதப்படுத்தாமல் தடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தடுக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.