‘கேரளாவைப்போல், தமிழகத்திலும் வாட்டர் பெல் திட்டம்’
பள்ளி மாணவர்கள் பலருக்கு நீர்ச்சத்து குறைபாடு உள்ளதை தொடர்ந்து வாட்டர் பெல் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கேரளாவைப்போல தமிழகத்திலும் மாணவர்கள் அனைவரும் காலை 11 மணி, 1 மணி, 3 மணி ஆகிய நேரங்களில் மணி அடித்தவுடன் கண்டிப்பாக குடிநீர் பருக வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.