tamilnadu

img

கூட்டணிக் கட்சியையே உடைத்த பாஜக! 2 எம்எல்ஏ-க்களை வளைத்தது

கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 14 எம்எல்ஏ-க்கள் இருக்கின்றனர். ஆனால், 12 எம்எல்ஏ-க்களேஇருக்கும் பாஜக, மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி (எம்ஜிபி), கோவா முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா 3 உறுப்பினர்கள் மற் றும் 3 சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது.பிரமோத் சாவந்த் முதல்வராக இருக்கிறார்.இந்நிலையில், கோவாவில் தனக்கு ஆதரவு அளிக்கும் மகாராஷ்டிர கோமந்தக் கட்சியையே இரண்டாக உடைத்து, அதன் 3 எம்எல்ஏ-க்களில் 2 பேரை பாஜக வளைத்துப் போட்டுள்ளது. மகாராஷ்டிர கோமந்தக் கட்சியைச் சேர்ந்த மனோகர் அஜ்கோன்கர், தீபக் பாஷ்கர் ஆகியோர் பாஜக-வுக்கு தாவியுள்ளனர். மேலும் அவர்கள் தாங்கள் பாஜக-வில் இணைந்ததை, கோவா மாநில துணை சபாநாயகர் மைக்கேல் லேபோவை செவ்வாயன்று நள்ளிரவு 1.45 மணிக்கு சந்தித்து கடிதம் முலம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேநேரம் கோமந்தக் கட்சியின் ஒற்றை எம்எல்ஏ-வாகி விட்ட தவலிக்கரின் துணைமுதல்வர் பதவி பறிக்கப்படும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், “பாஜக அதன் கூட்டணி கட்சிகளுக்கே ஆபத்தானது

என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது. மேலும் “பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தங்களின் இருப்பே கேள்விக் குறியாகிவிடும் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் உணர வேண்டும்” என்றும் அது கூறியுள்ளது.

;