tamilnadu

img

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு

பொள்ளாச்சி, மே 19- பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம் குறித்து, வன ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற் றது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள  ஆனைமலை புலிகள் காப்பகத்தில், தேசிய புலி கள் காப்பக ஆணையம் உத்தரவுப்படி  ஆண்டுதோறும்  மே மற்றும் டிசம்பர் மாதங்களில் வனவிலங்கு  கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி  இந்தாண்டுக்கான கோடைக்கால கணக்கெடுப்பு மே  19 ஆம் தேதி முதல் துவங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், முதல் நாளான செவ்வாயன்று  கணக் கெடுப்பில் பங்கேற்கும் வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக் கப்பட்டது.

பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி வனச்ச ரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட 62 நேர்கோட்டுப் பாதையில் வன ஊழியர்கள் தனித்தனிக்  குழுவாக பிரிந்து வனவிலங்குகளை கணக்கெடுப்பது முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆறு நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பில், முதல்  மூன்று நாட்கள் மாமிசம் மற்றும் தாவர உண்ணி வனவி லங்குகள் கணக்கெடுப்பும், மீதமுள்ள மூன்று நாட்களில்  வனவிலங்குகள் நடமாட்டம், கால்தடம், நககீறல்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவை குறித்து கணக்கெடுப்பும் நடைபெறவுள்ளது. இது குறித்தான செயல் விளக்க பயிற்சி யும் அளிக்கப்பட்டது. அதேநேரம், இந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கணக்கெடுப்பில் தன் னார்வலர்கள் ஈடுபடவில்லை என ஆனைமலை புலி கள் காப்பகத்தின் துணை இயக்குனர் செல்வம் தெரிவித் துள்ளார்.

;