tamilnadu

img

ஒருவழிப்பாதையில் அத்துமீறி நுழையும் வாகனங்கள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தாராபுரம், நவ. 27- தாராபுரத்தில் காவல்நிலையம் முன்பு ஒருவழிப்பாதையில் அத்துமீறி நுழையும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற் படுகிறது. எனவே உடனடியாக நடவ டிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராபுரம் பேருந்துநிலையம் முன்பு நெடுஞ்சாலை பணிக்காக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தாராபுரம் புறவழிச்சாலை பகு தியில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டு மதுரை, மூலனுர், கரூர், ஒட்டன் சத்திரம், உடுமலை உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் பேருந்துகள் பழைய ஹவுசிங்யூனிட் வழியாக சென்று பொள் ளாச்சி சாலை வழியாக பேருந்துநிலையம் அருகே வர வழி செய்யப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, காங்கயம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வரும் பேருந் துகள் பொள்ளாச்சி சாலை வழியாக பேருந்துநிலையம் வர வழி செய்யப்பட் டுள்ளது.  இந்நிலையில் மூலனுர், கரூரில் இருந்து வரும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நகர்பகுதியில் உள்ள தெருக் களின் வழியாக செல்கின்றது. மேலும், தாராபுரம் காவல்நிலையத்தை கடந்து செல்லும் ஒருவழிப்பாதையில் அத்துமீறி பேருந்துகள் எதிர்திசையில் செல்கிறது. இதனால் போலீஸ் நிலைய வளைவு பகுதியில் ஒருவழிப்பாதை வழியாக வரும் வாகனங்கள் எதிர்திசையில் திடீரென வாகனங்கள் அத்துமீறி நுழையும் போது நிலைதடுமாறி அருகில் செல்லும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. போலீசாரும் இதை கண்டு கொள்வதில்லை. எனவே போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பெரிய விபத்து நடப்பதற்கு முன்பு தடுத்து நிறுத்தவேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;