திருப்பூர், பிப். 4- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக திருப்பூரில் நகர்ப்புற வாழ்வாதார மையத்தினை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி சாலை, மாநகராட்சி வணிக வளா கத்தில் செவ்வாயன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார் பில், நகர்ப்புற வாழ்வாதார மையத் தினை மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் துவக்கி வைத்தார் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத் தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகி றது. இத்திட்டத்தின் நோக்கம் நகர்ப் புறத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு தேவையான சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்க ளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவ தாகும். இத்திட்டத்தின் படி சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன வளர்ச்சி தலைப்பின் கீழ் ஒவ்வொரு மாநகராட்சி பகுதிகளிலும் நகர்ப்புற வாழ்வாதார மையம் அமைக்கப்பட வேண்டும். நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் மக்களுக்கு தேவையான எலக்ட்ரிக்கல், பிளம்பிங், வீட்டு வேலைகள், லேப் டெக்னீசியன் போன்ற பல்வேறு அடிப்படை சேவை கள், இணையதள சேவைகள் மற்றும் பொது சேவைகள் செயல்பாட்டிற்கு வருகின்றன. அடிப்படை சேவைகள் வேண்டுவோர் 0421-2202315 என்ற எண்ணில் மையத்தினை தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டுமென தெரி வித்தார். இந்நிகழ்வின் போது, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் க.சிவ குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கோமகன், உதவி திட்ட அலு வலர்கள் தாமஸ்ராஜன், ர.ராதா கிருஷ்ணன், சுதா, சமுதாய அமைப் பாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.