tamilnadu

மான், முயல் வேட்டையாடிய 2 பேர் கைது

கோவை, ஆக. 3- கோவை பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி மான் மற்றும் முயல் களை வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த சில நாட்க ளாக துப்பாக்கி சத்தம் கேட்பதாக அந்தப் பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைய டுத்து, வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வனவர் ராதா கிருஷ்ணன், வனக் காப்பாளர்கள் மோகன்ராஜ், தினேஷ் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆகியோர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சர கத்திற்குட்பட்ட வனப்பகுதியின் பாரதிநகர் அருகே துப்பாக்கி சத்தம் இருமுறை கேட்டுள்ளது.

சத்தம் கேட்ட  இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். அப்போது, நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் இரண்டு பேர் வனத்துறையினரை கண்டவுடன் தப்பி யோட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை மீட்டனர்.  பின்னர், அவர்களிடம் விசாரணை செய்தபோது, கோவை கவுண்டம்பாளையம் ஆர்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ரஞ்சித்குமார், திம்மம்பாளையம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பாலுதுரை என்பவரின் மகன் ஜீந்தா என தெரியவந்தது. அவர்கள் வனப்பகுதியில் மான் மற்றும் முயல்களை வேட்டையாட வந்தததாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, அவர்களையும், அவர்களது துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களையும் பெரியநா யக்கன்பாளையம் காவல்துறையினரிடம் வனத்துறை யினர் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கடந்த 2 மாதத் திற்கு முன்புதான் ரஞ்சித்குமார் காரமடை வனப்பகுதி யில் மான் வேட்டையாடியபோது பிடிப்பட்டார். சிறையில் இருந்து வந்தவுடன் மீண்டும் மானை வேட்டையாட  முயன்ற போது பெரியநாயக்கன் பாளையம் வனத்துறை யினரால் பிடிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;