தூத்துக்குடி, ஆக. 21- ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் சுப் பிரமணியன் கடந்த ஆக.18ஆம் தேதியன்று மணக்கரை அருகே ரவுடியை கைது செய்யச் சென்ற போது நாட்டு வெடி குண்டு வீசப் பட்டதில் வீர மரணமடைந்தார். அவருக்கு வியாழனன்று தூத்துக் குடி மாவட்ட காவல்துறை அலுவ லகத்தில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தி, அவருடைய புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.