கோவை, ஆக.27 - கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு விபத்துகளில் பலியான ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழனன்று கோவையில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், முன்களப் பணியாளர்களாக நின்று செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகவியலாளர்களில் பல ரும் அக்கொடூர வைரசால் பாதிக்கப்பட்டும், அவர்களில் சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இவ்வாறு இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நினை வேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக, உயிரிழந்த ஊடகவியாலாளர்களின் குடும் பத்திற்கு மாநில அரசு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.