tamilnadu

img

காற்று மாசுபடுதலை தடுக்க மாற்றுத்திறனாளி விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை, டிச. 21 – காற்று மாசுபாடு குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியா குமரியில் இருந்து சென்னை வரை மாற்று திறனாளி இளைஞர் ஒரு காலுடன் சைக்கி ளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண் டுள்ளார்.  இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வர் மணிகண்டன். சுற்றுச்சூழல் காரண மாக காற்று மாசு அடைந்து வருவதால், வரும் சந்ததியினர் வாழ வழி செய்யும் வகை யில் அனைவரும் ஒரு மரமாவது நட வேண் டும் என வலியுறுத்தி ஒற்றை காலில் சைக்கி ளில் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண் டுள்ளார். கடந்த 13ம் தேதி கன்னியாகும ரியில் துவங்கிய இவரது பிரச்சார பய ணம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், மதுரை, திருப்பூர் வழியாக இவர் சனி யன்று கோவை வந்தார்.  இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில் எனது 15 வயதில் விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக எனது வலது காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு காலில் இருந்த என்னை பலர் ஏளனமாக பேசியதால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒற்றை காலில் சைக்கிள் ஓட்ட ஆரம்பித் தேன். இதனைத்தொடர்ந்து, சைக்கிளி லேயே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய லாம் என முடிவெடுத்து 2008ம் ஆண்டு சிவ கங்கையில் இருந்து சென்னை வரை சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், 2013ல் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை விழிப்பு ணர்வு பிரச்சார பயணம் என தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கின்றேன்.  தற்போது காற்று மாசு காரணமாக மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டு வரு கிறது. தில்லியை தொடர்ந்து சென்னை யிலும் காற்றின் மாசு அதிகரித்துள்ளது. ஆகவே ஒவ்வொருவரும் ஒரு மரமாவது நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி இந்த பிரச்சா ரத்தை மேற்கொண்டு வருகிறேன். இவ் வாறு அவர் கூறினார். மேலும், இவர் ஈரோடு, சேலம் வழியாக வரும் ஜனவரி ஒன்றாம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தனது விழிப்பு ணர்வு பயணத்தை நிறைவு செய்ய உள்ள தாகவும் அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித் தார்.

;