tamilnadu

img

துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

உடுமலை, செப். 15- உடுமலை நகராட்சியில் திடக்கழிவு  மேலாண்மை குறித்து துப்புரவு பணியாளர்க ளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் குப்பையின் வகைகள், அவை உருவா கும் இடத்திலேயே தரம் பிரித்தல், அளவு மதிப் பீடு, மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகர மான கழிவுகளை வகைப்படுத்துதல், மறுசுழற்சிக்கு பயன்படாத கழிவுகள் குறித்து பயிற்சி அளிக் கப்பட்டது. மேலும், தெரு சுத்தம் செய்தல், நுண் உரக்குடில், மண்புழு உரக்குடில், காற்றோட்ட முறையில் திடக்கழிவுகளை உரமாக மாற்று தல், குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்தல், வீட்டிலேயே உரக்குடில் அமைத்தல் குறித்து துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சியில் விளக்கப்பட்டது.  இப்பயிற்சி முகாமை நகராட்சி பொறியாளர்  தங்கராஜ் துவக்கி வைத்தார். முகாமில்  சுகாதார ஆய்வாளர்கள்செல்வம்,செல்வக்குமார்,  நகராட்சி ஆய்வாளர் ராஜ்மோகன், உடுமலை, தாராபுரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கண்டனர்.

;