tamilnadu

கோவை – மேட்டுபாளையம் இடையே இயக்கபடும் ரயில் சேவை

கூடுதல் நேரம் இயக்க முடிவு

கோவை, ஜன.29    கோவை – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப் பட்டு வரும் பயணிகள் ரயில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கூடுதலாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  கோவை – மேட்டுப்பாளையம் இடையே பயணி கள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளை யத்திலிருந்து கோவைக்கு நான்கு முறையும், கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு நான்கு முறை யும் என இவ்வழிதடப்பாதையில் எட்டு முறை இயக்கப் பட்டு வருகிறது. இப்பயணிகள் ரயிலில் தினமும் பள்ளி,  கல்லூரி மாணவ மாணவிகள், பொது மக்கள் என  ஆயிரக்கணக்கில் பயணித்து வருகின்றனர். இந்நிலை யில் பயணிகள் ரயிலின் சேவை இறுதியாக மாலை 5.50  மணியளவில் கோவையிலிருந்து புறப்பட்டு மேட்டுப் பாளையதிற்கு 6.40 மணிக்கு வந்தடைந்தவுடன் இதன்  சேவை நிறுத்தப்படுகிறது. இதன் பின்னர் மீண்டும்  அடுத்தநாள் காலை 8.15 மணியளவில் மேட்டுப்பா ளையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படுகிறது.  இதனடிப்படையில் இந்த பயணிகள் ரயில் சேவை யினை இரவில் ஒரு முறை கூடுதலாக இயக்கவேண்டும். இதனால் பணி முடித்து திரும்பும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் பெரிதும் பயனடைவார்கள் என பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் மேட்டுப்பாளையம்- கோவை இடையே பயணிகள் சேவை அதிகரிக்கபட்டுள்ளது என்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் 7.50 மணிக்கு கோவைக்கு சென்றடையும் என்றும் மீண்டும் கோவையில் இருந்து 8.20 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும் என்றும் தெரிவித்துள்ளது.

;