tamilnadu

மாற்றுத்திறன் சிறாரின் அன்னையர்க்கு உதவிட கேரளத்தின் ‘மாத்ரு ஜோதி’ திட்டம் விரிவாக்கம்

திருவனந்தபுரம், ஜுன் 29- கேரளத்தில் பார்வையற்ற குழந்தைகளின் அன்னையருக்கு நிதி உதவி அளிக்கும் ‘மாத்ரு ஜோதி’ திட்டத்தில், பல்வேறு வகையான ஊமுற்ற குழந்தைகளின் தாய்மாரும் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கேரள சமூகநீதி மற்றும் சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இத் திட்டத்திற்கு ரூ.12 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. கடும் உடல் ஊனத்துடனும், மனவளர்ச்சி குன்றிய நிலையி லும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் குழந்தைக ளின் அன்னையருக்கு இது உதவும். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.2000 வீதம் வழங்கப்படும். குழந்தை பிறந்து 3 மாதங்க ளுக்குள் விண்ணப்பிப்போருக்கு 24 மாத உதவி கிடைக்கும். 3 மாதங்களுக்கு பிறகு ஒரு ஆண்டு வரை காலதாமதமாக வரும் விண்ணப்பங்களுக்கு விண் ணப்பித்த நாள் முதல் குழந்தையின் இரண்டு வயது வரையிலான கால அளவில் இந்த உதவித்தொகை கிடைக்கும் என தெரிவித்தார்.

;