tamilnadu

img

வாணியாறு அணை இடதுபுறகால்வாய் திட்டம் நீட்டிப்பு செய்யப்படும்

தருமபுரி, ஏப்.9-வாணியாறு அணை இடதுபுறகால்வாய் திட்டம் நீட்டிப்பு செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி வாக்குறுதி அளித்தார்.தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்குறிஞர் ஆ.மணி தொகுதியில் தீவிரவாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், மத்தியிலும், மாநிலத்திலும் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் நீட்தேர்வு ரத்துசெய்யப்படும். ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். நிறுத்தப்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாணியாறு அணையின் இடதுபுறக் கால்வாயை நீட்டிப்புசெய்து அணையின் உபரிநீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் நீர்பாசன மேம்பாடு செய்யப்படும். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் எனகேட்டுக்கொண்டார்.இதில், திமுக ஒன்றியச்செயலாளர் சித்தார்த்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பழனி, கொமதேக நிர்வாகி பாரதி, தவமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் வஞ்சி, நிர்வாகிகள் சொக்கலிங்கம், பொன்னுசாமி, வெங்கடாசலம், சின்னு கண்ணகி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.இப்பிரச்சாரம் போதக்காடு, முள்ளிகாடு மோளையனூர், தேவராஜபாளைம், வெங்கடசமுத்திரம், பூனையானூர், பாப்பிரெட்டிபட்டி, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

;