tamilnadu

img

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல்-திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தருவோம்

கோவை, ஏப். 25-உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சூலூர் தொகுதி இடைத்தேர்தல் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் வியாழனன்று சூலூர் கொங்கு மஹாலில் நடைபெற்றது.உழவர் உழைப்பாளர் கட்சிதலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் செல்லமுத்து பேசுகையில், மோடி கடந்தநாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, விவசாயிகளின் தற்கொலையை தடுப்பேன் என்றும், விவசாயிகளின் தற்கொலைக்குகாரணம் கடன் கட்ட முடியாமைதான். எனவே, விளைபொருட்களுக்கு கட்டுபடியாகின்ற விலைநிர்ணயம் செய்யப்படும் என்றார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத மோடிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.அதேநேரம் திமுக தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின், விவசாய கடன், வங்கி கடன், நகை கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வோம் என்றும், கேபிள்டிவி கட்டணம் குறைக்கப்படும், டோல்கேட் முழுமையாக ஒழிக்கப்படும், கரும்பு டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாய் என பல்வேறுதிட்டங்களை அறிவித்துள்ளனர்.


எனவே, திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தருவோம் என்றார்.இதைத்தொடர்ந்து ஏ.வ.வேலுபேசுகையில், அனைத்து அரசுகளையும் ஒப்பிட்டு பார்க்கையில் கலைஞர் ஆண்டபோது தான் விவசாயிகளுக்கு பல திட்டங்களை செய்துள்ளார். இலவச மின்சாரம் கலைஞர் ஆட்சியில் தரப்பட்டது. விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்தார் கலைஞர். இதில் கொங்கு மாவட்டம் பயனடைந்துள்ளது. தற்போது விவசாயிகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


விவசாயிகளின் அவல நிலை மாற வேண்டும்என்றால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். பொங்கலூர் பழனிச்சாமியை வெற்றிபெறவைக்க உங்களால் முடியும். பொங்கலூர் பழனிச்சாமி வெற்றி பெற்றால் விவசாயிகள் வெற்றிபெறுவதாக அர்த்தம் என்றவர்,திமுக ஆட்சிக்கு வருகின்றதுஎன்று சொன்னால், சூலூர் சட்டமன்றம் உறுதுணையாக இருக்கின்றது என்று அர்த்தம் என்று பேசினார். முன்னதாக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமி பேசுகையில்;- இளைஞர்களுக்கு வழி விட மாவட்ட பொறுப்புகளில் இருந்துதன்னை விடுபட்டுக் கொண்டதாகவும், தற்போது, திமுக தலைவரின் உத்தரவிற்கு இணங்க இங்கு போட்டியிடுவதாகக் கூறினார். பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சியில் அமர்ந்த பாஜக அரசின் ஜிஎஸ்டி வரியால் தொழில்கள் முடங்கியும், விவசாயிகள் நலிவடைந்தும் விட்டனர். பணப்புழக்கமே இந்தியாவில் இல்லாமல் போய் விட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறினார்கள். ஆனால் எந்த கருப்பு பணமும்ஒழிக்கப்பட வில்லை. மோடியால்எந்த பயனும் இல்லை என பொதுமக்கள் கொதித்து போயுள்ளனர் என்று குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில், திமுகவின் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்நா.கார்த்திக் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல்செல்வராஜ், இருகூர் சந்திரன்,தளபதி முருகேசன், சண்முகம், உழவர் உழைப்பாளர் கட்சி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;