வேலை நிறுத்த போராட்டத்தில் தலைவர்கள் சாடல்
கோவை, அக்.23– வங்கிகளின் இணைப்பை கண் டித்து கோவையில் வங்கி ஊழி யர்கள் இரண்டு நாள் வேலை நிறுத் தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை வங்கிகளின் இணைப்பை கண்டித்து இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட் டத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அழைப்பு விடுத்தது. இதன் ஒருபகுதியாக கோவையில் அவிநாசி சாலையில் உள்ள ஓரியண்டல் வங்கி முன்பு வேலை நிறுத்த போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மனோ கரன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். வேலை நிறுத்த அவ சியம் குறித்து இந்திய வங்கி ஊழி யர் சம்மேளனத்தின் பொதுச்செய லாளர் மகேஷ்வரன், மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் என்.சுப்பிரமணியன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலை வர்கள் மீனாட்சி சுப்பிரமணியம், எம்.வி.ராஜன் ஆகியோர் உரை யாற்றினர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்று தலைவர்கள் பேசுகையில், நாடு முழுவதும் வேலையின்மை அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான இளைஞர்கள் படித்து பட்டம் பெற்று வேலை வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர். இவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டிய மத்திய அரசு இருக்கிற வேலையையும் பறிக்கிற அரசாக உள்ளது. தற் போது பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் காரணமாக பல்லா யிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்பிற்கான கனவு பறிக் கப்பட்டுள்ளது.மேலும், வங்கி களின் இணைப்பாள் வாடிக்கை யாளர் சேவை கடுமையாக பாதிக் கும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இந்திய பொதுத்துறை வங்கிகளை சீரழிக்கும் மத்திய அரசின் நடவ டிக்கை ஒருபோதும் வங்கி ஊழி யர்கள் ஏற்க மாட்டோம். தொடர்ந்து போராட்டத்தை வலுப்படுத்து வோம் என்றனர். இந்த வேலை நிறுத்த ஆர்ப் பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பங்கேற்று மத்திய அர சிற்கு எதிராக கண்டன முழக்கங் களை எழுப்பினர்.