tamilnadu

img

ராட்சத குடிநீர் குழாய் உடைந்து சாக்கடையில் குடிநீர் கலக்கும் அவலம்

சேலம், மே 17-சேலத்தில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து சாக்கடை நீரில் கலந்து வீணாகி வருகிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் மேட்டூரிலிருந்து சேலம்மாநகர பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குடிநீர் குழாய்உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிவருகிறது. இதுகுறித்து சேலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் போல் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.