tamilnadu

img

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்

கோவை, பிப். 19- மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மற்றும் உதகையில் பல்லாயிரக்கணக் கானோர் திரண்டு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், என்ஆர்சி, என்பிஆர் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய கருப்பு சட்டத்தை கண்டித்தும் நாடு முழுவதும் பெரும் போராட் டம் தன்னெழுச்சியோடு நடை பெற்று வருகிறது. இதன்தொடர்ச் சியாக தமிழகத்திலும் இப்போ ராட்டம் நாளுக்குநாள் வலுவ டைந்து வருகிறது. தமிழக சட்ட மன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிற போதே குடியுரிமை திருத்தச் சட் டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். என்ஆர்சி, என் பிஆர் கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என இக்கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண் டும் என புதனன்று தமிழகம் முழு வதும் ஒரே நாளில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங் கள் மற்றும் சட்டமன்ற அலுவ லகம் முற்றுகை என அறிவிக்கப் பட்டது. இப்போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களில் பங்கேற்று தங் களது எதிர்ப்பை வெளிப்படுத்தி னர்.  இதன் ஒருபகுதியாக கோவை யில் அனைத்து ஜமாத் கூட்ட மைப்பின் சார்பில் கோவை ரயில் நிலையத்தின் முன்பு இருந்து பல்லாயிரக்கணக்கான இஸ்லா மிய மக்கள் குவிந்தனர். இதனை யடுத்து இந்திய இஸ்லாமியர்க ளின் உணர்வுகளுக்கு மதிப்பளித் திடு, தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழர்களுக்கு குடியு ரிமை வழங்கு, தமிழக சட்டமன் றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற் றிடு உள்ளிட்ட கோரிக்கை முழக் கங்களை எழுப்பியபடி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர். இப்போராட்டத்திற்கு இமாம்கள் தலைமையில் மிகுந்த கட்டுப் பாடோடு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வயது வித்தி யாசமின்றி ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் காரண மாக நூற்றுக்கணக்கான காவல்து றையினர் குவிக்கப்பட்டு பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். இப் போராட்டம் ஆரம்ப போராட்டம் என்றும், மத்திய அரசு மற்றும் தமி ழக அரசு நடைபெற்று வரும் பல் வேறு போராட்டங்களுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட உள்ளதாக போராட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
உதகை
இதேபோல், நீலகிரி மாவட்ட ஜமாஅத் உலமா சபை, நீலகிரி மாவட்ட இஸ்லாமியர்கள் கூட்ட மைப்பு உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டனர். இந்தப் போராட் டத்திற்கு நீலகிரி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபையின் தலை வர் கமருத்தீன் பாக்கவி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முகமது மூசா சிராஜி, மக்கள் சட்ட மைய உதவி அமைப்பின் நிறுவ னர் விஜயன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைச்செயலாளர் அபுதாஹீர், மாவட்டச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் கண்டன உரை யாற்றினர். முன்னதாக, ஏடிசி சுதந்திர திடலில் இருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட் சியர் அலுவலகம் நோக்கி பேரணி யாக சென்றனர். அப்போது அவர் களை காவல்துறையினர் ஒய்எம் சிஏ அருகே தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் அங்கேயே கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர். பின் னர், சிலரை மட்டும் மாவட்ட ஆட் சியரை சந்திக்க காவல் துறையி னர் அனுமதித்தனர். இதனையடுத்து, உலமா சபை நிர்வாகிகள் சிலர் மட்டும் சென்ற னர். அப்போது மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை சந் தித்த அவர்கள் குடியுரிமை திருத் தச் சட்டத்தை தமிழகத்தில் நடை முறைபடுத்த மாட்டோம் என தமி ழக சட்டமன்றப் பேரவையில் தீர் மானம் நிறைவேற்றிட அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்தப் போராட் டம் நடைபெறுவதை ஒட்டி உத கையில் ஏராளமான காவல் துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டனர்.

;