புதுதில்லியில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் திங்களன்று விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆலந்தூர் பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்களவை உறுப்பினர்கள் கோவை பி.ஆர்.நடராஜன், திருப்பூர் கே.சுப்பராயன், ஈரோடு அ.கணேசமூர்த்தி, நாமக்கல் ஏ.கே.பி. சின்ராஜ், பொள்ளாச்சி கு.சண்முகசுந்தரம், சேலம் பார்த்திபன், திண்டுக்கல் வேலுச்சாமி, பெரம்பலூர் பாரிவேந்தர், கரூர் ஜோதிமணி மற்றும் வழக்கறிஞர் ஈசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.