tamilnadu

img

பழங்குடியின மக்களுக்கு மாற்று இடம் வழங்க துரித நடவடிக்கை எடுத்திடுக அனைத்துக் கட்சியினர் மனு

பொள்ளாச்சி, செப்.11- வால்பாறை கல்லார்குடி பழங் குடியின மக்களுக்கு மாற்று இடம் வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்துக் கட்சி கூட்டியக்கத்தினர் வியா ழனன்று வால்பாறை வட்டாட்சி யர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்த வால்பாறை அருகே கல்லார்குடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பல ஆண் டுகளாக பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத் தில் ஏற்பட்ட கனமழையினால் குடியிருப்புகள் அனைத்தும் வெள் ளப்பெருக்கில் அடித்துச் செல்லப் பட்டது.  இதனால், அப்பகுதி மக் கள் தாய்முடி எஸ்டேட் பகுதியில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட் டனர்.

இந்நிலையில், மாற்று இடம் கோரி கல்லார்குடி பழங்குடியின மக்கள் தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டும், மனு அளித்தும் வந் தனர். மேலும், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் இணைந்து பல்வேறு அதிகாரிகளி டம் மனு அளித்தும் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக் க்கவில்லை.  இந்நிலையில், கல்லார்குடி பழங்குடியின மக்களுக்கு பூர்விக இடமான தெப்பகுளமேடு பகுதி யில் நில அளவை செய்து அனுபவ நிலப்பட்டா வழங்கிட உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொள்ளாச்சி அனைத்துக் கட்சி கூட்டியக்கத்தினர் வால் பாறை வட்டாட்சியர் அலுவல கத்தில் வட்டாட்சியர் ராஜாவிடம் மனு அளித்தனர்.

இம்மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், கல்லார்குடி மக்களின் கோரிக்கை கள் மீது உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித்தார்.   இதில்,  திமுக நகர செயலாளர் வரதராஜன், காங்கிரஸ் கட்சியின் சக்திவேல், சிபிஎம் தாலுகா செய லாளர் கே.மகாலிங்கம், சிபிஐ வட்டார செயலாளர் சண்முகம்,  விசிக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ச.பிரபு,  மதிமுக எம்.ஏ.வி.துரைபாய், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிக ளின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

;