tamilnadu

22 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு

திருப்பூர், ஜன. 31 - திருப்பூர் மாவட்டம் முழுவதும் 22 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, கொங்கு நகர், பல்லடம், உடு மலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில்22 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட னர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது, குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தின் உட்புறம், வெளிப்புறம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். மேற் கூரை, தரைத்தளம், சுவர் பகுதிகள் பழுதடையாமல் எளி தில் கழுவும் தன்மையுடையதாகவும், துளை எதுவும் இல்லாமலும் இருக்க வேண்டும். குடிநீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து உப கரணங்களும் துரு பிடிக்காமலும், பூஞ்சைகள் வளராமலும் இருக்க வேண்டும். ஆய்வகங்கள் கண்டிப்பாக செயல்பட வேண்டும். மேலும், பரிசோதனை முடிவுகள் அனைத்தும் உரிய பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும். குடிநீர் பாட் டில்களில் தயாரிப்பு தேதி, பேட்ஜ் எண், உணவு பாதுகாப்பு உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் தெளிவான முகவரி ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்து மேற்படி 22 நிறுவனங்களில் ஆய்வு செய் யப்பட்டது. நீரை சேமித்து வைத்திருக்கும் தரைமட்டத் தொட்டியை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அனைத்து குடிநீர் பாட்டில் விநியோகிப் பாளரும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்றி ருக்க வேண்டும். ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் லேபிள் கொண்ட 20 லிட்டர் கேன்களை மற்றொரு தயாரிப்பு நிறுவனத்தில் சென்று குடிநீர் பிடித்து விற்பனை செய் தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உணவு தரம் மற்றும் குடிநீர் தரம் பற்றி 94440-42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

;