tamilnadu

img

காலதாமதம் செய்யாமல் சம்பளப் பேச்சுவார்த்தை தொடங்குக

நாமக்கல், ஜூலை 25- காலதாமதம் செய்யாமல் சம்பளப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மோகனூர் சிஐடியு நேஷனல் ஒர்க்கர்ஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மோகனூர் சிஐடியு நேஷனல் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆண்டு பேரவை கூட்டம் மோகனூரில் நடைபெற்றது. பேரவை கூட்டத்திற்கு சங்கத்தின் கவுரவத் தலைவர் பி.பழனிசாமி தலைமை வகித்தார். துணைச் செயலாளர் எஸ்.குணசேகரன் வரவேற்புரையாற்றினார். சம்மே ளன மாநில பொதுச் செயலாளர் யு.உதயகுமார் சிறப்பு ரையாற்றினார். சங்க செயலாளர் என்.வெங்கடாசலம், பொருளாளர் குப்புசாமி ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர். முடிவில்  சிஐடியு மாவட்ட செய லாளர் ந.வேலுசாமி நிறைவுரையாற்றினார். முன்னதாக, இப்பேரவையில், 20 சதவிகித போனஸ் தொகையும்,  10 சதவிகித கருணை தொகை வழங்க வேண்டும். காலதாமதம் செய்யாமல் உடனடியாக சம்ப ளப் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும். பணி மூப்பு  அடிப்படையில் பதவி உயர்வு வழங்காமல், ஒருதலைப் பட்சமாகவும், சர்க்கரைத் துறை ஆணையரின் உத்தரவுக்கு மாறாக செயல்படும் ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடுவது என இப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து சங்கத்தின் புதிய கெளரவ தலைவராக பி.பழனிசாமி, தலைவராக சிங்காரம், செயலாளராக என்.வெங்கடாசலம், பொருளாளராக பி.குப்புசாமி, துணை தலைவர்களாக சசிகுமார்,  சௌந்தரராஜன், துணை செயலாளர்களாக சரவணகுமார், எஸ்.குணசேகரன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உட்பட 17 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.