tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

சேலம், ஜன.31-. மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகை யில் சேலத்தில் மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. சேலம் மாவட்ட இளைஞர் நலன், விளையாட்டு  மேம்பாட்டு துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி களை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவி லான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டி கள் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத் தில் வெள்ளியன்று நடைபெற்றது. இப்போட்டி களை  உதவி ஆட்சியர் மோனிகா ரானா துவக்கி வைத்தார். இதில் தனிநபர் போட்டியாக 50 மீ, 100 மீ, 200 மீ ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி, நீளம் தாண்டுதல் போட்டியும், குழு போட்டியாக இறகுப் பந்து, மேஜைப்பந்து, கபடி உள்ளிட்ட போட்டி களும் நடைபெற்றன. இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை திறன்பட வெளிப்படுத்தினர். போட்டிகளில் தன்னம் பிக்கையோடு பங்கேற்று வெற்றி பெற்ற மாற்றுத்தி றனாளிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

;