tamilnadu

img

தருமபுரி உணவுப்பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு முகாம்

தருமபுரி, நவ.29- உணவுப்பாதுகாப்பு உரிமம் மற்றும்  பதிவுச்சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் உணவுப்பாதுகாப்பு துறையின் சார்பில் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் வியாழனன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்து வர் ஏ.பானுசுஜாதா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் முகாமை துவக்கி வைத்தார். உணவு பாது காப்பு அலுவலர் கே.நந்தகோபால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்தையன்,  அருணாசலம் உள்ளிட்டோர் பேசினர். இந்திய அரசு உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நகர்ணய சட்டம் 2006 விதிகள்  2011-ன் படி உணவுப்பொருள் தயாரிப் பாளர்கள்,உணவகங்கள், மளிகை மொத்த  மற்றும் சில்லறை வியாபார கடைகள், பேக்கரி, இறைச்சிக் கடைகள், துரித உணவ கங்கள், டீ கடை,சாலையோரக் கடைகள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், சப்ளையர்கள் உள்ளிட்ட அனைவரும் உணவுப்பாதுகாப்பு உரிமம் பதிவு பெறுவது சட்டமாகும். மேலும் மாவட்டத்தில் உணவுப்பாது காப்பு உரிமம், பதிவுசெய்யாதவர்கள், புதுப்பிக்காதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம், பதிவு சம்மந்தமான சந்தேகங்களை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை நேரிலோ  அல்லது அலுவலக தொலைபேசி எண் 04342-230385 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தெரிவித் தார்.  முகாமில் 150க்கும் மேற்பட்ட விண் ணப்பங்கள் பெறப்பட்டன.

;