திருப்பூர், ஜூலை 25- மத்திய பாஜக அரசு வெளி யிட்டுள்ள தேசிய வரைவு கல்விக் கொள்கை முற்றிலும் ஆபத்தான அம்சங்களை கொண்டுள்ளது. இதை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு கோடிப் பேரிடம் கையெழுத்துப் பெறும் இயக்கம் வியாழனன்று துவங்கி உள்ளது. மத்திய அரசின் தேசிய வரைவு கல்விக் கொள்கையால் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி அளிப்பதற்கு பதில் பணம் படைத்த வர்கள் மட்டுமே கல்வி கற்க முடி யும். மேலும் கார்ப்பரேட் கம்பெனி களின் லாப வேட்டைக்கான துறை யாக மாற்றப்படும். இது போன்ற பல்வேறு ஆபத்தான அம்சங்களை அம்பலப்படுத்தி மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளும் விதத்தில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு கோடிப்பேரிடம் கையெழுத்து பெறுவதென முடிவு செய்யப் பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் பி.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், திருப்பூர் வடக்கு மாநகரக் குழு உறுப்பினர் பி.ஆர்.கணேசன், திமுக மாநகரச் செயலாளர் டிகேடி மு. நாகராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆ.ராமசாமி, எம்எல்எப் தொழிற் சங்கப் பொறுப்பாளர் மு.சம்பத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்டத் தலைவர் முஸ்தபா, கொமதேக மாநகர் மாவட்ட பொரு ளாளர் கே.வேலுமணி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகரத் தலைவர் எஸ்.முத்துக்குமார் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
குடிமங்கலம்
இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குடிமங்கலம் ஒன்றியம் பெதபம்பட்டியில் திருப்பூர் மாவட் டக்குழு உறுப்பினர் வெ.ரங்க நாதன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் தாமக முன்வந்து மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை வரைவிற்கு எதிராக கையெழுத்திட்டனர்.