tamilnadu

img

மாணவர்களுடன் விஞ்ஞானிகள் சந்திக்கும் நிகழ்ச்சி

 திருப்பூர், ஜூன் 27 - தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் 20ஆவது மாநில மாநாட்டை திருப்பூரில் ஆகஸ்ட் மாதம்  நடத்துவதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுடன் விஞ்ஞானிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்து வது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாட்டு வரவேற்புக்குழு முடிவு செய் துள்ளது. திருப்பூர் நஞ்சப்பா மாநக ராட்சி மேல்நிலைப் பள்ளி வளா கத்தில் புதனன்று அறிவியல்  இயக்க மாநில மாநாட்டு  வரவேற்புக்குழுக் கூட்டம் நடை பெற்றது. அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர் ஆ.சிகாமணி தலை மையில் நடைபெற்ற இக்கூட் டத்தில் மாநிலச் செயலாளர்கள் முகமது பாட்ஷா, தியாகராஜன், மாவட்டச் செயலாளர் தினேஷ், மாநாட்டு வரவேற்புக்குழுச் செய லாளர் ஆ.ஈஸ்வரன் மற்றும் வர வேற்புக்குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். ஆகஸ்ட் 9 முதல் 11ஆம் தேதி முடிய மூன்று நாட்கள் அறிவியல் இயக்க மாநில மாநாட்டை திருப் பூரில் சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி இக்கூட்டத்தில் மாநில மாநாட்டுச் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஜூலை மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக திருப்பூர் மாவட் டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் ஜூலை 29, 30 ஆகிய இரு நாட்கள்  அறிவியல் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் மக்கள் சந்திப்பு  இயக்கங்கள் நடத்துவது. ஜூலை மாதத்தில் 30 விஞ்ஞானிகளை அழைத்து வந்து 30 பள்ளிகளில்  மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிகள்  நடத்தவும் முடிவு செய்யப்பட் டுள்ளது. அத்துடன் ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து நாட்கள் திருப்பூரில் மிகப் பெரிய அளவில் கல்வித் திருவிழா நடத்தி முன்னணி கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாண வர்கள், பொது மக்களைப் பங் கேற்கச் செய்வது என்றும் வர வேற்புக்குழுக் கூட்டத்தில் தீர்மா னிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவாக பொருளாளர் கார்த்திக் நன்றி கூறி னார்.