tamilnadu

img

நூறு நாள் வேலை திட்டத்தில் கூலி உயர்வு கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

சேலம், ஜூன் 14- நூறு நாள் வேலை திட்டத்தில் கூலி உயர்வு கேட்டு சேலம் செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் செட்டிசாவடி மாந்தோப்பு பகு தியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்டோர் தேசிய ஊரக வேலை உறு தியளிப்பு திட்டத்தின் கீழ் அப்பகுதியில் ஏரி தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் வழக்கத்தை விட அதிக நேரம் பணியில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப் படுத்துவதாகவும்,  வேலைக்கு தகுந் தாற்போல் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.200 வழங்க வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் முற்று கையிட முயன்றவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் தங்கள் பிரச் சனைகளை ஆட்சியரிடம் மனுவாக அளித்து செல்லுமாறு வலியுறுத்தினர். இதையடுத்து முற்றுகையிட வந்தவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் ஆட்சியர் அலு வலகத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

;