தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த கோரி செவ்வாய்க்கிழமை முதல் நெசவாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூலி உயர்வு பிரச்சனையை மாவட்டநிர்வாகம் விசைத்தறி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கவேண்டும் என்று பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நெசவுத் தொழிலாளர்கள் சாலை மறியல், தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் உரி மையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படாததால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த விசைத்தறி தொழி
லாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி செவ்வாய்க்கிழமை முதல் டி.சுப்புலாபுரம் கிராமத்தில் தொமுச, ஏடிபி, சிஐடியு, ஏஐடியுசி ,உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.