ரேசன் குறைதீர் கூட்டம் பெயரளவிற்கு நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
சேலம், அக்.13- சேலம் மாவட்டத்தில் சனியன்று நடந்த ரேசன் குறைதீர் கூட்ட முகாம், பெயரளவிற்கு நடத்தப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைகளை தெரிவிக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் சிறப்பு குறைதீர் கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாதந்தோறும் 2வது சனிக்கிழமைகளில் இக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது ரேசன் கடைகளில் உள்ள குறைபாடுகளை புகாராக தெரிவிக்கவும், பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் போன்றவற்றை நிவர்த்தி செய்து கொள் ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சனியன்று சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், கெங்கவல்லி, சங்ககிரி, இடைப் பாடி, பெத்தநாய்க்கன்பாளையம் மற்றும் காடை யாம்பட்டி ஆகிய தாலுகாக்களில் உள்ள 13 இடங்களில் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக் கப்பட்டிருந்தது. இதில் மாவட்டத்தில் பெரும் பாலான இடங்களில், பெயரளவிற்கு மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும், பேனர் மட்டும் வைத்து, போட்டோ எடுத்து சென்றதாக குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் ரேசன் குறைதீர் கூட்டம், சேலம் மேற்கு தாலுகாவில் உள்ள சர்க்கார் கொல்லப் பட்டியில் நடந்த கூட்டத்தில், போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்காக மட்டும் சிலரை வர வழைத்து பேனரை கட்டிவிட்டு, கூட்டத்தை முடித்துக் கொண்டனர். இதேபோல், சேலம் தாலுகா கொழிஞ்சிப்பட்டியிலும் பெயரளவிற்கு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதேநிலை தான் மாவட்டம் முழுவதும் நடந்துள்ளது. ஆனால், கூட்டம் நடத்தியதற்கான செலவை மட்டும் கணக்கிட்டு அதிகாரிகள் எடுத்துக்கொள்கின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
ஜீப் கவிழ்ந்து விபத்து: முதியவர் உயிரிழப்பு
ஏற்காடு, அக்.13- ஏற்காட்டில், ஜீப் கவிழ்ந்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த முதி யவர் சனியன்று உயிரிழந் தார். சேலம் மாவட்டம், ஏற் காடு, கூத்துமுத்தல் கிராமத்தை சேர்ந்த 7 பேர் கடந்த 6 தேதியன்று ஆயுத பூஜைக்காக, ஏற்காடு கடை வீதியில்பொருட்கள் வாங்கி கொண்டு, ஜீப்பில் கூத்துமுத்தல் திரும்பிய போது, ஜீப் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த குப்பு சாமி மகன் ஆண்டி (60), வெங்டாசலம் மகன் ரத்தினம் (37) ஆகிய இரு வரும் சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சனி யன்று அதிகாலை 2 மணிய ளவில் ஆண்டி உயிரி ழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும் பத்தினரிடம் ஒப்படைக் கப்பட்டது.
சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ஏற்காடு, அக்.13- ஏற்காட்டில், சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய விவசாயி களுக்கு வேளாண்மைத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இயற்கை இடர்ப்பாடுகளான வறட்சி, வெள்ளம், தீப் பிடித்தல், சூறாவளி காற்று மற்றும் பூச்சி தாக்குதல் ஆகிய வற்றால் மகசூல் பாதிப்பு ஏற்படும் தருணத்தில் விவ சாயிகளுக்கு இழப்பீடு பெறுவதற்கு பயிர் காப்பீடு செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.470 பிரீமியம் வீதம் வரும் நவம்பர்மாதம் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். புகை படம், ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், பட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றுடன் ஏற்காடு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுக வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.