tamilnadu

சேலம் , உடுமலை முக்கிய செய்திகள்

சேலத்தில் திராவிடர் கழகப் பவளவிழா மாநாடு கே.பாலகிருஷ்ணன் பங்கேற்கிறார்

சேலம், ஆக. 20-                   திராவிடர் கழகத்தின் பவளவிழா மாநாடு வருகிற 27ஆம் தேதி சேலம் அம்மா பேட்டையில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் மணியம்மையார் நினைவரங்கில் நடக்கவுள்ளது.  இந்த பவளவிழாவில், திராவிட கழகத் தலைவர் வீரமணி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் அழகிரி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., இந்தியன் யூனி யன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர்  மொய்தீன், மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சேலம் நாடாளுமன்ற  உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், ராஜேந் திரன் எம்எல்ஏ, வீரபாண்டி ராஜா ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்புரையாற் றவுள்ளனர்.  மாநாட்டில். இந்த பவளவிழாவுக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட திராவிடர் கழக முன்னணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

காவல்துறையின் பொய் வழக்கில்  வாலிபர் சங்க நிர்வாகிகள் விடுதலை

உடுமலை, ஆக. 20- பேருந்து கட்டணத்தைக் குறைக்க வேண்டி போராட்டம் நடத்திய வாலி பர் சங்கத்தின் நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கில் இருந்து உடுமலை குற்றவியல் நீதி மன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு உடு மலை வட்டம், குரல்குட்டை கிராமத் திற்கு வரும் மினி பேருந்தில் தன் னிச்சிச்சையாக கட்டணம் உயர்த்தப் பட்டது. அரசின் அறிவிப்பு எதுவும் இல்லாமல் கட்டணத்தை உயர்த்திய மினி பேருந்தை குரல்குட்டை வாலிபர் சங்கத் தலைமையில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி னார்கள் . பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உயர்ந்தப்பட்ட கட்ட ணத்தை பேருந்து நிர்வாகம் குறைத்து கொண்டது.  ஆனால் ஆத்திரம் அடைந்த பேருந்து நிர்வாகத்தின் தூண்டுதல் பெயரில் காவல்துறை வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் கி.கனகராஜ், மகேந்திரன், சதிஷ், ரசித் அலி, சர வணன் ஆகியோர் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்ததது. இந்நிலையில்  கடந்த பத்தாண்டு கள் உடுமலை குற்றவியல் நீதி மன் றத்தில் வழக்கு விசாரணை நடை பெற்றது. இவ்வழக்கின் தீர்ப்பு (19ஆம் தேதி) திங்கட்கிழமை வழங்கப்பட் டது. அதில்  வாலிபர் சங்க நிர்வாகிகள்  அனைவரும் விடுதலை செய்யப்பட் டனர். இவ்வழக்கை சிறப்பாக நடத்திய வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திற்கு வாலிபர் சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கபட்டது.

வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறிக்கும்  மதவாத அமைப்புகள் மீது நடவடிக்கை  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், ஆக. 20 – திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் என்ற பெயரில் வர்த்தகர்கள், வியா பாரிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் மதவாத அமைப்பினர் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: திருப்பூர் முதலிபாளை யம் சிட்கோ பகுதியில் உள்ள கடை ஒன்றில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் போவதாகச் சொல்லி  விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தோர் கட்டாயப்படுத்தி பணம் கேட்டுள்ளனர். கடையில் பெண்  குழந்தையின் கண்ணெதிரிலேயே அவரது அம்மாவையும், விற்பனை யாளரான உறவினரையும் தாக்கிய துடன், கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.  கடந்த காலங்களிலும் இதேபோல் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி  கொண்டாட்டம் எனச் சொல்லி குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என கட்டாயப்படுத்தி வியாபாரி களை, வர்த்தகர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. இந்த ஆண்டு இரு பண்டிகைகளும் அடுத்தடுத்து வர இருக்கும் நிலையில் இந்து மதத்தின் பெயரில் செயல்ப டும் அமைப்புகள் இதுபோல் வர்த்த கர்கள், வியாபாரிகள் மற்றும் பொது மக்களை மிரட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த அரசும், காவல் துறையும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சிட்கோவில் கடைக்காரர்களைத் தாக்கிய குற்றவாளிகளை உடன டியாகக் கைது செய்வதுடன், சட்டப்படி தண்டனை அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது போல் அச்சுறுத்திப் பணம் வசூலிப்போருக்கு எதிராக அனைத்துப் பகுதி ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் செயலாளர் சி.மூர்த்தி கேட்டுக் கொண் டிருக்கிறார்.

;