பித்தளைப் பாத்திரத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
திருப்பூர், ஜன. 29 - திருப்பூர் அனுப்பர்பாளையம் வட் டார பித்தளைப் பாத்திரத் தொழிலா ளர்களுக்கான சம்பள உயர்வு உடன்பாடு பற்றி முதல் கட்ட பேச்சுவார்த்தை புதனன்று நடைபெற்றது. உற்பத்தியாளர்கள் ஆறு மாத கால அவகாசம் கோரியதை தொழிற் சங்கங்கள் நிராகரித்த நிலையில், அடுத்த வாரம் மீண்டும் பேசுவது என தீர்மானிக் கப்பட்டது. அனுப்பர்பாளையம் வட்டாரப் பாத்திரத் தொழிலாளர்களுக்கான முந்தைய சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் காலாவதியானது.எனவே புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு கோரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கு 50 சதவிகிதமும், பித்தளை, செம்பு மற்றும் வார்ப்பு அயிட்டங்களுக்கு 60 சதவிகிதமும், ஈயப்பூச்சு அயிட்டங்களுக்கு 70 சதவிகிதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் பாத்திர உற்பத்தியாளர் சங்கங் களுக்கு கடந்த 13ஆம் தேதி கடிதம் கொடுக் கப்பட்டது. இந்நிலையில் பித்தளைப் பாத்திர உற் பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் தொழிற் சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் ஜன.29 புதனன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் தொழிற் சங்கங்கள் சார்பில் சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகள் கே.ரங்கராஜ், கே.குப்பு சாமி, ஏடிபி நிர்வாகிகள் ஆர்.தேவராஜ், பி.கலைமணி, ஏஐடியுசி நிர்வாகிகள் எஸ்.செல்வராஜ், பி.நாகராஜ், எல்பிஎப் நிர்வாகிகள் என்.வேலுச்சாமி, ஏ.தர்மலிங்கம், எச்எம்எஸ் நிர்வாகிகள் கே.திருஞானம், எஸ்.பாண்டிய ராஜ், ஐஎன்டியுசி நிர்வாகிகள் வி.ஆர்.ஈஸ்வரன், கே.அசோக், காமாட்சியம்மன் சங்க நிர்வாகிகள் டி.வி.முத்துக்கிருஷ்ணன், எஸ்.பி.அர்ச்சுனன், பிஎம்எஸ் நிர்வாகிகள் ஏ.டி.சீனிவாசன், எம்.லட்சுமி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர். பித்தளைப் பாத்திர உற்பத்தியாளர் சங்கத் துணைத் தலைவர் பி.மனோகரன், செயலாளர் எம்.எஸ்.வி.முத்து, பொரு ளாளர் கே.வி.குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இப்பேச்சுவாத்தையில் பித்தளை பாத்திர உற்பத்தியாளர்கள் தரப்பில் சம்பள உயர்வு வழங்குவதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட் டனர். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் மறுத்து விட்டனர். சம்பள உயர்வு தொடர்பாக கால அவகாசம் என்ற கருத்தை நிராகரித்து விட்டனர். இதைத் தொடர்ந்து உற்பத்தி யாளர்கள் தரப்பில் ஒரு வாரத்திற்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண்பது என்று முடிவு செய்யப் பட்டது.
அன்னூர் அருகே கார் பேருந்து மோதி விபத்து திருப்பூர் செய்தியாளர் தாய் மரணம்
திருப்பூர், ஜன. 29 - அன்னூர் அருகே நரியம்பள்ளி பகுதியில் காரும், பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் திருப்பூர் மாவட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தியாளர் கே.ராஜசேகர் (32), அவரது தாயார் கே.ஜமுனாராணி ஆகி யோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி பெரியாயி பாளையம் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஜமுனா ராணி (55). இவர்களது மகன் ராஜ சேகர் (32). டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் திருப்பூர் மாவட்டச் செய்தியாளராக பணி செய்து வந்தார். இவரது சகோதரி பானுப்பிரியா (30). திருமணமாகி கணவர் புவனேஷ்வரனுடன் கோத்தகிரியில் வசிக்கிறார். மேலும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி செய்து வருகிறார். ராஜசேகருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையை சேர்ந்த கலைவாணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அவர் கர்ப்பமாக சென்னையில் அவரது தாயார் வீட்டில் உள்ளார். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடை பெற இருந்தது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டு விசேஷ நிகழ்வில் பங்கேற்கவும், வளைகாப்பு நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கவும் தாயார் மற்றும் சகோதரி, அவரது இரண்டரை வயது மகன் இன்ப நித்திலன் ஆகியோருடன் ராஜேசேகர் வீட்டிலிருந்து காரில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்றுள்ளார். அவிநாசி காவல் எல்லைக்கு உட்பட்ட நரியம்பள்ளி புதூர் அருகே சென்றபோது, ஊட்டியிலிருந்து மேட்டுப் பாளையம், அன்னூர் வழியாக மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து நேரிட்டது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த ஜமுனாராணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த ராஜசேகர், பானுப் பிரியா, குழந்தை ஆகிய மூவரும் கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ராஜ சேகர் உயிரிழந்தார். பானுப்பிரியா, குழந்தை இருவரும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். ஜமுனா ராணி உடல் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது. சம்பவம் தொடர்பாக அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இரங்கல்
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட மக்கள் செய்தி தொடர்புத் துறை, திருப்பூ ரில் உள்ள பத்திரிகையாளர் சங்கங்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூத னன், சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதி தமிழன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார மந்த நிலையை மறைக்கவே குடியுரிமைச் சட்டம்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
உடுமலை, ஜன.29- பொருளாதார மந்த நிலையை மறைக் கவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறை வேற்றி உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார். உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் தென்னரசு தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்பு செய்தியாளர் சந்திப்பில் கே.எஸ். அழகிரி கூறுகையில், இந்தியாவின் பொரு ளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது, எல்லாதுறைகளிலும் இந்திய அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டது.ஆனால் அவைகளை எல்லாம் ஒழுங்கு படுத்த மோடியால் முடியவில்லை. அதற்குப் பதிலாக பாகிஸ்தானுக்கு எதிராக, இஸ்லா மியர்களுக்கு எதிராக குடியுரிமைத் திருத்த ச் சட்டம் என்ற பெயரில் பல்வேறு உணர்ச்சி கரமான விஷயங்களை கூறி மக்களை திசை திருப்புகிறார். தற்போது உள்ளாட்சிகள் அனைத்திலும் பொதுநிதி இல்லாமல் இருக்கிறது. காரணம் அரசு அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வருவதற்கு முன்பே அந்த பணத்தை செலவு செய்து விட்டார்கள் . எனவே உள்ளாட்சி பொது நிதிகள் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு தர வேண்டும். தமிழகத்தில் ஏராளமான தனியார் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வரு கின்றன. அங்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு இந்த பேருந்து களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவிகளை வைக்க வேண்டும் என்று கூறினார்கள். வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத் தப்பட்டு இன்னும் 10 ஆண்டுகள் கருவிகள் பயன்படும் நிலையில் தமிழக அரசு தற் போது அந்த கருவிகளை மாற்றிக் குறிப் பிட்ட ஒரு நிறுவனத்தின் கருவியை புதி தாக மாற்றி அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இது எதற்காக என்று முதல்வரும், போக்குவரத்துத்துறை அமைச்சரும் பதில் அளிக்க வேண்டும் என் றார்.
அரசு கலைக் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டுதல் கண்காட்சி
அவிநாசி, ஜன.29- அவிநாசி அருகே அரசு கலைக்கல்லூரி யில் தொழில்நெறி வழிகாட்டுதல் கண் காட்சியை புதனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சிதுறை, தொழில் நெறி வழிகாட்டுதல் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பயன் பெற பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் தொழில் நெறி காட்டுதல் மையத்தின் சார்பில் கண் காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் துவக்கிவைத்து தொழில் நெறி கட்டுதல் கையேட்டினை வெளி யிட்டார். மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மாணவ, மாணவிகள் படிக்கும்போதே போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கல்லூரி படிப்பு முடித்த பின்பு சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தன் னார்வு பயிலும் வட்ட புத்தகங்கள், வரை படங்கள் கண்காட்சியில் வைக்கப் பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியம், கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண் டனர்.
சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்
திருப்பூர், ஜன.29- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட அளவிலான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் வருகின்ற பிப்.6ந் தேதியன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத் திற்கு மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் தலைமையில் நடை பெறுகிறது. இக்கூட்டத்திற்கு திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகள், பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகள், காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகள், வெள்ளகோவில் நகராட்சிக் குட்பட்ட 21 வார்டுகள், தாராபுரம் நக ராட்சிக்குட்பட்ட 30 வார்டுகள் மற்றும் உடுமலைப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகள் உள்ளிட்ட 180 வார்டு களுக்கு மட்டும் நடைபெறவுள்ளது. இப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளவேண்டும். இதில் அனைத்துத்துறையினரும் கலந்து கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜயகார்த்தி கேயனிடம் நேரில் அளிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.