tamilnadu

சேலம் முக்கிய செய்திகள்

சங்ககிரி நகருக்குள் லாரிகள் வராமல்  மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தல்

சேலம், ஆக.2- சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, சங்ககிரி  நகருக்குள் வரும் லாரிகள் சேலம்-கோவை தேசிய  நெடுஞ்சாலை வழியாகச் செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.  இதுகுறித்து சங்ககிரி காவல் ஆய்வாளர் என்.முத்து சாமி, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:  சேலம் மாவட்டம், சங்ககிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்ககிரி பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவு மணி மண்டபம் மற்றும் சங்ககிரி மலையிலும் தீரன் சின்னமலை நினைவு நாள் சனியன்று (ஆக.3) அனுசரிக்கப்படுகிறது. இதனால், அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை சேலம், கோவை, ஈரோடு, திருச்செங்கோடு, கொங்கணாபுரம் பகுதியில் இருந்து வரும் லாரிகள் அனைத்தும் சங்ககிரி நகருக்குள் வராமல் பவானி தேசிய நெடுஞ்சாலை (சேலம்-கோவை) வழியாகச் செல்லுமாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

உதகை, ஆக.2- நீலகிரி மாவட்ட விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆக.16 ஆம் தேதியன்று (வெள்ளிக்கி ழமை) காலை 11 மணியள வில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலை மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. ஆகவே, விவசாயிகள் பொதுவாக விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் ஆக.7 ஆம் தேதிக்குள் தோட் டக்கலை இணை இயக்கு நர், தபால் பெட்டி எண் 72, உதகை – 643001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடி யாக அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தனிநபர் கழிப்பிட திட்டத்தில் மோசடி  ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட மேலாளர் பணியிடை நீக்கம்

சேலம், ஆக.2- காடையாம்பட்டி ஒன்றியத்தில் தனி நபர் கழிப்பிட திட்டத்தில் மோசடி செய்தது  தொடர்பாக முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலரும், தற்போது ஊரக வளர்ச்சித் துறையின் மாவட்ட மேலாளருமான ஜெய பால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை யில் மாவட்ட மேலாளராக இருந்தவர் ஜெய பால். இவர் புதனன்று பணி ஓய்வுபெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முன்னதாக, கடந்த 2015- 16-ம் ஆண்டு காடையாம்பட்டி ஒன்றி யத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக ஜெயபால் பணிபுரிந்தார். அப்போது, தனி நபர் கழிப்பிட திட்டத்தில், பயனாளிகள் பெயரை மாற்றி மோசடி செய்ததாக புகார்  எழுந்தது. இதுதொடர்பான விசாரணை, சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புப் பிரிவு காவல்துறையிடம் நிலு வையில் உள்ளது.  இந்நிலையில் ஜெயபால் பதவி உயர்வு பெற்று ஊரக வளர்ச்சித் துறையில் மாவட்ட  மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையிலும், தனிநபர் கழிப்பிட மோசடி புகார் விசார ணையில் இருக்கும் நிலையில், ஜெய பாலை பணியிடை நீக்கம் செய்து சேலம்  மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் உத்தர விட்டார்.  இதேaபோன்று அவருடன் கடந்த 2015-16-ம் ஆaண்டு கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக எழிலரசி  என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது  எழிலரசியும் ஜெயபாலுடன் இணைந்து அதே மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில்  தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவல ராகப் பணியாற்றிய எழிலரசி ஓய்வுபெறும்  நாளில் கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி  பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது  குறிப்பிடத்தக்கது. 

;