tamilnadu

img

நொய்யல் கரையில் வசிப்போருக்கு வீடு தர ரூ. 70 ஆயிரம் கேட்கும் வீட்டு வசதி வாரியம்

திருப்பூர், ஜன. 13 - நொய்யல் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு வீடு தர வீட்டு வசதி வாரியம் ரூ.70 ஆயிரம் கேட்பதாகப் புகார் எழுந் துள்ளது. திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் வசித்துவரும் கூலித்தொழிலாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  பல ஆண்டு காலமாக நொய்யல் ஆற்றங்கரையில் வசித்து வருவோருக்கு வீரபாண்டியில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கினார்கள். இதற்கு முன்பணமாக ரூ. 10 ஆயிரம் கட்டச் சொன்னார்கள். பெரும் சிரமத்துக்கு இடையே, பணத்தை கட்டிய நிலையில், தற்போது மீண்டும் ரூ.70 ஆயிரம் கட்டச் சொல்கின்றனர். பொருளாதார ரீதியாக எவ்விதப் பின்புலமும் இல்லாமல் வாழும் தங்களால் இத்தனை பெரிய தொகையை செலுத்த முடியாது. மாத வாடகை ரூ.300 முதல் ரூ.400 வரை நிர்ணயித்தால்கூட கட்டிவிடுவதாக தெரிவித்தனர். எனவே கூடுதல் பணம் செலுத்த முடியாத நிலை யில் ரூ.10 ஆயிரம் கட்டியதற்கு வீடு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் செலுத்திய பணத்தைத் திரும்பத் தரும்படியும், சாலையோரம் வசிக்கும் மக்கள் கேட்டுக் கொண்டனர்.

;