tamilnadu

img

அனைத்து துறை பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தக் கோரிக்கை

நாகப்பட்டினம், ஜன.24- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வியாழன் மாலை நாகையில் மாவட்டத் தலைவர் து.இளவர சன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அ.தி.அன்பழகன் உரையாற்றினார். கூட்டத்தில், வடவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஒருவர் சம்பவத் தன்று இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவரை திடீரென வழிமறித்து ஒரு நபர், பாலியல் தொந்தரவில் ஈடுபட முயன்று பெண் ஊழியரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்த நபர் தப்பினார். இது தொடர்பாக வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை உட னடியாக கைது செய்ய வேண் டும். அனைத்து துறை பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி 27-ம் தேதி ஆட்சியர் அலு வலகம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணைக் குழு சார்பிலும், அன்று மாலை அனைத்து வட்ட மையங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் பா.இராணி, கே. ராஜு, சி.வாசுகி, ஆர்.கலா, ஜெ. ஜம்ரூத் நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சி.வாசுகி நன்றி கூறினார்.

;