இளம்பிள்ளை, மார்ச் 4- இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டி யில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப் பட்டி ஊராட்சி 4 ரோடு பகுதியில் சுடு காடு உள்ளது. இந்த சுடுகாட்டில் இறந்த வர்களின் உடலை தகனம் செய்ய கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மேடை அமைக் கப்பட்டது. தற்போது, இதன் தூண்களில் ஆங்காங்கே காரைகள் பெயர்ந்து, மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சுடு காடு பராமரிப்பு இன்றி உள்ளது. எனவே தகன மேடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்பட வேண்டும். தகன மேடையை சுற்றி தடுப்புச் சுவர் இடிந்து காணப்பட்டு வருவதால் இதனையும் புதி தாக அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.