கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
கோவை, நவ.12– கோவை அரசு மருத்துவமனையில் 2 கிலோ எடை கொண்ட சிறுநீரக புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் வீரம்மாள் (55). இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் 24 செண்டி மீட்டரும், 2 கிலோ எடையும் கொண்ட புற்றுநோய் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த கட்டி ரத்த குழாய் வரை பரவி இருந்தது. இதை யடுத்து ரீனஆஞ்கியோ எம்பாலிஷேஷன் மூலம் அந்த கட்டியின் அளவு மற்றும் எடையை குறைத்து, கட்டி 8 செண்டி மீட்டராக குறைந்த பின் அறுவை சிகிச்சை மூலம் அவை முற்றிலும் அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை கோவை அரசு மருத்துவ மனையில் முதல் முறையாக செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக, இது போன்ற அறுவை சிகிச்சைக்காக ரூ.2.5 கோடி மதிப்புள்ள நவீன இயந்திரம் சமீ பத்தில் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டது. இதில் தற்போது வரை 23 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மூன்று லட்சம் ரூபாய் வரை செலவா கும் இந்த அறுவை சிகிச்சைகள், கோவை அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப் பட்டு வருகிறது.