tamilnadu

img

சுமை தொழிலாளர்கள் நலன் காக்க வலியுறுத்தி பேரணி

ஈரோடு,ஜன 29- ஈரோடு மாவட்டம், வ.உ.சி மைதானத்திலிருந்து, மாவட்ட அனைத்து சுமை தூக்குவோர் மத்திய சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை பேரணி நடை பெற்றது. ஈரோட்டில், ஜவுளி, மஞ்சள், கட்டடப் பொருட்கள், தோல், உள்ளூர், வெளியூர் செல்லும் லாரிகள் என பல்வேறு நிறுவனங்களில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சுமை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக, வணிகர்கள் மற்றும் சுமைப் பணியாளர்களுக்கு இடையே கூலி ஒப்பந்தம் கையெ ழுத்தாகி, நடைமுறையில் இருந்ததுள்ளது. ஆனால் சமீப காலமாக சில நிறுவனங்கள், நீதிமன்றங் களை நாடி தாங்கள் நிறுவன வேலைக்கு விருப்பமுள்ள நபர்களை பணியமர்த்தி கொள்ளவதாக அனுமதி பெற்று வந்துள்ளனர்.  இதனால் பிற மாநில தொழிலாளர்களை நிய மித்தும், தேவையற்ற நேரங்களில் அவர்களை நீக்கியும், முறையாக சம்பளம் வழங்காமலும் செயல்பட்டு வருகின் றனர். அவ்வாறு இல்லாமல், சுமைப்பணியாளர்களின் வாழ் வாதாரம், வேலை போன்றவைகளை கருத்தில் கொண்டு, கடந்த காலங்களை போல செயல்பட வேண்டும். சுமைப்ப ணியாளர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி பேரணியாக சென்றனர். இப்பேரணியின் இறுதியில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்ட்து. இப்பேரணிக்கு சிஐடியு சுமை பணியாளர் சங்கத் தலைவர் ப.மாரிமுத்து மற்றும் பாட்டாளி சுமை தூக்குவோர் சங்க  கௌவுரவ தலைவர் ஆறு முகம் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;