tamilnadu

img

அவிநாசியில் மக்கள் தொடர்பு முகாம்

அவிநாசி, ஜன.29- அவிநாசி அருகே  பொங் கலூரில் தனியார்  திருமண மண்டபத்தில் புதனன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 343 பய னாளிகளுக்கு ரூ.1.30 கோடி  மதிப்பிலான நலத்திட்ட  உதவிகளை மாவட்ட  ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு பல்வேறு வகை யான வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்த நலத்திட்டங்களை பொது மக்கள் மேன்மேலும் தெரிந்து கொள்ளும் வகையிலும்,  மாவட்டநிர்வாகத்தினையும், பொதுமக்களையும் இணைக்கும் வகையில் மக்கள் தொடர்பு முகாம் மாதம் ஒருமுறை நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்கள் தோறும் நடை பெற்று வருகிறது. இம்முகாம்களை பொது மக்கள் நல்ல முறையில் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் 343 பயனாளி களுக்கு சுமார் ரூ.1.30 கோடி மதிப்பிலான  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. 

முன்னதாக, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நலத்துறை, பொது  சுகாதாரம், தோட்டக்கலைத்துறை, ஊரக  வளர்ச்சி முகமை ஆகிய துறையின் மூலம்  அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கு களையும் மாவட்ட ஆட்சியர் பார்வை யிட்டார். இந்நிகழ்வில், அவிநாசி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அ.ஜெகதீசன், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், சமூக  பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் விமல்ராஜ், அவிநாசி வட்டாட்சியர் சாந்தி,  உதவிஇயக்குநர் (நில அளவை) பி.சசிக் குமார், பொங்கலூர் ஊராட்சி மன்றத் தலைவர் விமலா மற்றும் துணை ஆட்சி யர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

;