tamilnadu

img

அரசு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் மனு

அவிநாசி, ஜன. 6- அவிநாசி அருகே மேல்நிலை தொட்டி அருகில் கழிவுநீர் விடுவதைத்  தடுத்து நிறுத்தக் கோரி பொதுமக்கள்  பேரூராட்சி அலுவலகத்தில்  திங்க ளன்று மனு அளித்தனர். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு  நியூ டவுன் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலை யில் அரசுக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இயற்கை முறையில் 100 மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.  அப்பகுதியில் மேல்நிலைத் தொட்டி அமைக்கப் பட்டு குடியிருப்பு வாசிகளுக்கு தண்ணீர் வழங்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் வருடம்  அரசுக்குச் சொந்தமான நிலத்தில் தனிநபர் ஒருவர்  எவ்வித அனுமதியும் இன்றி கழிவு நீரை வெளியேற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது.  இந்நிலையில் தற்போது மீண்டும் சாக்கடை கால்வாய் பணிகளுக்காக மரங்கள் வெட்டப் பட்டுள்ளன. தற்போது கால்வாய் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டு, கழிவு நீர் கால்வாய் அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.  இது தொடர்பாக பேரூராட்சி அதிகாரி தெரி விக்கையில், இரண்டு நாட்களில் வருவாய்த்துறை மூலமாக நிலத்தை அளக்கும் பணி நடைபெறும் எனத் தெரிவித்தார்.

;