tamilnadu

img

தமிழக மக்களுக்கு பரிசாக பொங்கல் பானை வழங்குக: மண்பாண்ட தொழிலாளர் கோரிக்கை

திருப்பூர், ஜன. 13 - தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசு  வழங்கும் நிலை யில் பொங்கல் பானை வழங்க மண்பாண்டம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரிசி, கரும்பு,வெல்லம் உள்ளிட்ட பொருட்களை தமிழக வழங்கும் போது, பொங்கல் பானையும் சேர்த்து வழங்க வேண்டும் என மண்பாண்டம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், காங்க யம், அவினாசி, உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், அகல் விளக் குகள், மண் அடுப்புகள், குழந்தை களுக்கான விளையாட்டு பொருட் கள், வீட்டு உபயோக பொருட்கள், கோவிலில் வைக்கும் உருவ பொம்மைகள் ஆகியவற்றை உற் பத்தி செய்து வருகின்றனர். குறிப் பாக கார்த்திகை மாதத்தில் திரு விளக்குகளும், தை மாதத்திற்கு பொங்கல் பானைகளும் தயார் செய்கின்றனர். தற்போது நவீன தொழில் நுட்பங்களின் வளர்ச்சி காரண மாக மண்பாண்ட பொருட்களின் பயன்பாடு குறைந்து உலோக, ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன் பாடு அதிகரித்து வருகிறது. எனவே மண்பாண்ட பொருட் களின் விற்பனை சரிந்ததோடு, பொருட்களை உற்பத்தி செய்ய தேவைப்படும் குளத்து மண் தட்டுப்பாடு காரணமாக இவர் களின் வாழ்வாதாரமும் முடங்கிப் போனது. இதன் காரணமாக இத்தொழிலில் ஈடுபட்டுவந்த பலரும் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டதால் மண்பாண்ட தொழிலாளர்களும் அருகி வரு கின்றனர். அதேசமயம் கலை வேலைப்பாடு, பண்டைய பண்பாட்டு ஈடுபாடு ஆகியவற் றின் காரணமாக மண் பாண்டங் கள் மீது நகர்ப்புற மக்களுக்கு ஆர் வம் அதிகரித்தும் வருகிறது. தற்போது பொங்கல் நெருங்கி வரும் நிலையில், பொங்கல் பானைகள் தயார் செய்வதில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். விற்பனை மந்தம், மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக குறைந்த அளவி லேயே பானை உற்பத்தி செய்து வருகின்றனர். தற்போது குளங்க ளில் மண் இல்லாததால் தனியார் நிலங்களில் விலை கொடுத்து மண் வாங்கி வந்து பொங்கல் பானை கள் உற்பத்தி செய்கின்றனர். இதன் விலை ரூ.150 முதல் 300 வரை விற்கிறது. இதனால் பொது மக்கள் இந்த பானைகளை ஆர்வமாக வாங்க முன்வருவ தில்லை. இந்நிலையைத் தவிர்க்கவும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வருடம் முழுவதும் வேலை வாய்ப்பை வழங்கவும், தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு பொது மக்களுக்கு வழங்கும் பரி சுப்பொருட்களோடு, பொங்கல் பானையும் சேர்த்து வழங்க வேண் டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழர் பண்பாட் டின் ஒரு அடையாளமாகவும் இந்த மண் பானைகள் இருப்ப தால் மண்பாண்ட உற்பத்தியா ளர்களின் இக்கோரிக்கையை அரசு பரிசீலித்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

;