tamilnadu

img

காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, டிச. 11 –  மேட்டுப்பாளையத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட வழக்க றிஞர்கள் மீது பொய் வழக்கு பதிந்த காவல்துறையை கண்டித்து கோவை நீதிமன்றம் முன்பு புத னன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையத்தில் கடந்த டிச.4 ஆம் தேதி சுவர் இடிந்து விழுந் ததில்  4  குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இம்மக் களுக்கு நியாயம் கேட்டு நாகை திரு வள்ளுவன், வழக்கறிஞர் வெண் மணி, கார்க்கி உள்ளிட்ட ஏராள மானோர்  போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனையடுத்து காவல்து றையினர் தடியடி நடத்தி கூட் டத்தை கலைத்தனர். இதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டதாக 24 பேரை கைது செய்து சேலம் மற்றும் கோவை சிறைகளில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து இரு தினங்க ளுக்கு முன்பு அனைவரும் பிணை யில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் பிணையில் வெளிவந்த நாகை திருவள்ளுவனை மேலும் ஒரு வழக்கில் கோவை மத்திய சிறை வாசலில் வைத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்நிலையில், மக்களுடைய நலனுக்காக சமூக அக்கறையோடு போராடிவரும் வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதை கண்டித்து புதனன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராள மான வழக்கறிஞர்கள் பங்கேற்று காவல்துறையினரின் நடவடிக் கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

;