tamilnadu

img

மாவட்ட நூலக அலுவலரின் ஊழியர் விரோத போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தருமபுரி ஜன-31, மாவட்ட நூலக அலுவலரின் ஊழியர் விரோத போக்கை கண் டித்து தமிழ்நாடு பொதுநூலகத் துறை அலுவலர் சங்கத்தினர் தரும புரி மாவட்ட நூலகம் முன்பு வெள் ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். தருமபுரி மாவட்ட நூலக அலு வலகத்தில் மாவட்டநூலகர் (பொறுப்பு) கோ.சேகர் ஊழியர் களிடம் வேறுபாடு காட்டுவது, ஊழியர்களை பழிவாங்கும் நடவ டிக்கை போன்றவற்றில் ஈடுபட் டுள்ளார். குறிப்பாக பாப்பிரெட்பட்டி முழுநேர நூலகத்தில் மூன்றாம் நிலை நூகராக பணிபுரிந்து வரும் கலைவாணி என்ற மாற்றுத்திற னாளியை அரூரில் இரண்டாம் தளத்தில் இயங்கி வரும் நூலகத் திற்கு பணிமாறுதல் செய்துள் ளார். இதனால் கலைவாணி மாடி  படிக்கட்டில் ஏறுவதில் சிரமப் பட்டு வருகிறார். ஓர் இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை மிக நீண்டதூரம் பயணம் செய்யுமாறு பணிமாறுதல் செய்துள்ளார். இத னால் ஊழியர்களுக்கு பணவிரை யமும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். மேலும் அவர்சாரந்த சங்க ஊழி யர்களுக்கு சலுகைகளும், மற்றவர் களுக்கு கடின வேலைகளை வழங்கி ஊழியர்களை பழிவாங்கி வருகிறார்.ஊழியர்களுக்கு வழங் கவேண்டிய பணப்பயன்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகி றார். இவ்வாறு அவரின் தொடர் ஊழியர் விரோத போக்கைக் கண் டித்தும், பகுதிநேர கூட்டுநர்க ளுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு வழங்க வேண்டிய  ஊதிய நிலு வைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பகுதிநேர கூட் டுநர்களுக்கும், பகுதிநேர நூல கர்களுக்கு 8-வது ஊதிய மாற்றத் தின்படி 2016ஜன. 1 ,முதல் 4 ஆண் டுகளாக ஊதிய மாற்றத்தை வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு பொதுநூகத் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மு.முனிராஜ் தலைமைவகித்தார் .மாவட்டச் செயலாளர் பி.பிரபாகரன், மாநில தணிக்கையாளர் தீ.சண்முகம், முன்னாள் மாநில பொதுச்செயலா ளர் சி.சரவணன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டசெய லாளர் ஏ.சேகர்,மாவட்டபொரு ளாளர் கே.புகழேந்தி, மகளிர் துணைக்குழு அமைப்பாளர் பி. எஸ்.இளவேணில்,சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். நிறை வாக மாவட்டப் பொருளாளர் எஸ். சரவணகுமார் நன்றி தெரி வித்தார்.

;