tamilnadu

img

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு வீடுகளில் தேசிய கொடியேற்றி போராட்டம்

கோவை, பிப். 18- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், என்ஆர்சி, என் பிஆர் ஆகிய மக்கள் கணக்கெடுப்பு திட்டத்தை கைவிடக்கோரியும் கோவையில் செவ்வாயன்று பொது மக்கள் வீடுகளில் தேசிய கொடியேற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும்  பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையிலும் கடந்த இரு மாதங்க ளாக பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் கோவை உக்கடம், கரும்புக்கடை  உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரி வித்து பொதுமக்கள் வீடுகளின் முகப் பில் தேசிய கொடியை கட்டினர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறு கையில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள்  மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும் பப்பெற வலியுறுத்தியும் தமிழக சட்ட மன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். மத்திய அரசு குடி யுரிமை திருத்தச் சட்டத்தை  திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி பொதுமக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பதாக தெரி வித்தனர்.

;