tamilnadu

img

லாபமும்... கட்டுப்படியான விலையும்... இல்லை

இதுதான் இனிப்பை விளைவித்த கரும்பு விவசாயிகளின் பொங்கல்

எந்தவொரு பண்டிகையும் இனிப்புகளுடன்தான் துவங் கும். இதில் தமிழர்களின் உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கரும்புகளை சுவைத்துத்தான் தொடங்கும். அத்தகைய இனிப்பை பயிரிட்டு, விளைவித்து தருகின்ற கரும்பு விவசாயிகள், லாபமும் இல்லாமல், கட்டுப்படியான விலையும் கிடைக்காமல் உள்ளதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.  மதுரை மாவட்டத்தில் மாங்குளம், சின்ன மாங்குளம், மேலூர், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் உட்பட பல பகுதிகளில் பல ஏக்கரில் கரும்பு பயிரிட்டு சாகுபடி செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காகவே இப்பகு திகளில் கரும்பு பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டில் மாங்குளம் கிராமப் பகுதியில் சுமார் 300 ஏக்கர் வரை கரும்பு பயிரிட்டுள்ளனர்.  கரும்பு விளைச்சல், அதன் விலை குறித்து சின்னமாங்குளத்தைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயி கூறுகை யில், 3 ஏக்கர் வரை கரும்பு பயிரிட்டுள்ளேன். ஒரு ஏக்கரில் கரும்பை விளைவிப்பதற்கு, விவசாயத்தொழிலாளர்களின் கூலி உட்பட ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இந்த ஆண்டு லாபம் இல்லை. கரும்புக்கு கட்டுப்படியான விலையும் இல்லை. நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட அதிக ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் வியாபாரிகள், குறைவான விலைக்கே கரும்புக்கட்டுகளை வாங்கிச்செல்கின்ற னர். 15 கரும்புகள் சேர்ந்தது ஒரு கட்டு ஆகும். வியாபாரிகள் ஒரு கட்டு கரும்பை 150 ரூபாய்க்கு வாங்கிச்செல் கின்றனர்.  கரும்புக்கு கட்டுப்படியான சரி யான விலை வேண்டும். கரும்பு விவசாயம் பாதிக்கப்படும்போது அரசிடமிருந்து நிவாரணம் எதுவும் கிடைப்பதில்லை. பயிரிட்டு பாதிப்படைந்த கரும்பிற்காவது அரசு நிவாரணம் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  கரும்புகளை வெட்டி,கட்டு கட்டி லாரியில் ஏற்றும் பொய்கைக்கரை பட்டியைச் சேர்ந்த விவசாயத்தொழி லாளர்கள் கூறுகையில், எங்கள் ஊரிலிருந்து 27 பேர் வந்துள்ளோம். 1 கட்டு கரும்பை வெட்டி,கட்டு கட்டி, லாரியில் ஏற்றுவதற்கு 50 ரூபாய் தருவார்கள். நாங்கள் அதனை பகிர்ந்துகொள் வோம். 20 கட்டுகள் சேர்ந்தது ஒரு வண்டி எனும் கணக்கு உள்ளது. இந்த கணக் கின்படி பார்த்தால் ஒரு லாரியில் 150 வண்டி கரும்புக்கட்டுகளை ஏற்றலாம். இங்கு வெட்டப்படும் கரும்புகள் திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல மாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படுகின்றது. கரும்பு அறுவடை காலம் தவிர்த்து மற்ற காலங்களில், விவசாய கூலி வேலை, கட்டிட வேலை என பல வேலைகளுக்குச் செல்வோம் என்று தெரிவித்தனர்.  -பா.ரணதிவே

;