கோவை, பிப். 19- கோவை, பெரியநாயக்கன்பாளையத் தில் அமைந்துள்ள பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரி வித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித் துள்ளதாவது, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வளாகத்தில், தனி யார் துறையில் வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் வெள்ளி யன்று, நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி யின் மூலம் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். மேலும், கோவை மாவட்ட வேலையற்ற இளைஞர்கள் பயன் பெறும் வண்ணம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டும் மையம், மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.22ஆம் தேதியன்று பெரியநாயக்கன் பாளையம் பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், தொழில்கல்வி பயின்றவர் கள், ஐடிஐ படிப்பு பயின்று சான்றிதழ் பெற்ற வர்கள் மற்றும் டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள், மேலும் இதுபோன்ற அனைத்து கல்வித்தகுதி உடைய ஆண், பெண் இருபாலருக்கும் நேர்காணல் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தனி யார் துறையில் வேலையளிப்போர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவை யான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மனுதாரர்கள் வேலை யளிப்பவருக்கு எந்தவித கட்டணமும் அளிக்க தேவையில்லை. இந்த தனியார் வேலைவாய்ப்பு முகா மில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன டைய வேண்டும் என தெரிவித்தார்.