tamilnadu

img

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்குக

சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, டிச. 26 –  உயர்நீதிமன்ற உத்தரவின்படி பல ஆண்டுகளாக ஒப்பந்த பணி யில் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திடக்கோரி  கோவையில் வியாழனன்று சிஐ டியு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.   கோவை மாநகராட்சியில் பல ஆண்டுகாலம் அத்துக்கூலிக ளாக ஒப்பந்த பணியில் உள்ள  ஊழியர்களை நிரந்தர பணியா ளர்களாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து சிஐடியு தொழிற்சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.  இந்நிலையில் கோவை மாநக ராட்சியில் 500க்கும் மேற்பட்ட துப்புரவு பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு நேர்கா ணல் நடைபெற்றது. இதில் ஆயி ரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக இந்த துப் புரவு பணிக்கு ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாகவும் குற்றச் சாட்டு எழுந்தது.  இந்நிலையில் சிஐடியு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னு ரிமை தர வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து துப்புரவு தொழி லாளர்களின் நியமனத்தை நிறுத் திவைக்கவும், ஒப்பந்த ஊழியர்க ளுக்கு முன்னுரிமை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக கோவை  மாநகராட்சியின் கவனத்தை ஈர்க் கும் வகையில் வியாழனன்று சிஐ டியு ஊரகவளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் தலை மையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  கோவை தெற்கு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார் தலைமை தாங்கினார். கோரிக்கை கள் குறித்து சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் உரையாற்றினர். இதில் சங்க நிர்வாகிகள் கணேசன், ராஜக்கனி, செல்வராஜ் மற்றும் ஏராளமான துப்புரவு தொழிலாளர் கள் பங்கேற்று கோரிக்கை முழக் கங்களை எழுப்பினர்.

;