tamilnadu

img

சேவூர் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க

அவிநாசி, ஜூலை 11- அவிநாசி அடுத்த சேவூரில்  ரோட்டரி கிளப் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி உதவியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி வியாழனன்று நடை பெற்றது.   அவிநாசி ஒன்றியம் சேவூர் ஊராட்சியில் குற்றச் சம்ப வங்களை தடுப்பதற்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில், ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் 23 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த கண்காணிப்பு கேமராக்களை வாங்குவதற்கு  ரோட்டரி கிளப் சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல்கள், பேக்கரி  உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து ரூ.4 லட்சத்திற் கான காசோலை வழங்கினர்.   இதுகுறித்து காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெக நாதன் கூறுகையில், மக்கள் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும்  வகையில் சேவூர் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளது. இது காவல் நிலையத்திலிருந்து  கண்காணிக்கப்படும். எதிர்காலத்தில்   கிராமப்புறங்களிலும்  கேமரா பொருத்தி வைஃபை மூலம் காவல் நிலை யத்தில் இணைத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.

;