tamilnadu

img

இந்திய விவசாயத்தை கார்ப்ரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதா? சிஐடியு, விச, விதொச ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 23-  இந்திய விவசாயத்தை கார்ப்ரேட்டுகள் கையில் தாரை வார்ப்பதைக் கண்டித்து வியாழனன்று சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோ வன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்வராஜ் உள் ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.  இதில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், மின்சார சட்டம் 2020-ஐ திரும்ப பெற வலியுறுத்தியும், அத்தியாவசியப் பொருட்கள் மீதான சட்டத் திருத்தம், நூறு நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  

ஈரோடு

இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;