உற்சாகமாக பங்கேற்ற யானைகள்
பொள்ளாச்சி, ஜன.17- கோவை மாவட்டம், பொள் ளாச்சி மற்றும் மேட்டுபாளையத் தில் உள்ள யானை முகாமில் பொங்கல் விழா கொண்டாடப்பட் டது. கோவை மாவட்டம், பொள் ளாச்சியில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கீழ் உள்ள டாப்சி லிப் யானைகள் முகாமில் வெள்ளி யன்று பொங்கல் விழா கொண்டா டப்பட்டது. இதில் வனத்துறை சார்பில் பாரமரிக்கபட்டு வரும் சின்னதம்பி உட்பட, 18 வளர்ப்பு யானைகள் அணிவகுக்கப்பட்டு பொங்கல் விழா சிறப்பிக்கப்பட் டது. மேலும் மலைவாழ் மக்கள் சார்பில் சிறப்பு பூஜை நடத்த பட்டு யானைக்கு பிடித்த வாழைப் பழம் மற்றும் கரும்பு, தேங்காய், பொங்கல் உணவாக வழங்கப்பட் டது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு ரசித்ததோடு, அவர்களும் யானை களுக்கு கரும்பு, வாழைபழங்களை வழங்கி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து நடை பெற்ற யானைகளின் அணிவ குப்பு அங்கிருந்த சுற்றுலா பயணி களை வெகுவாக கவர்ந்தது.
மேட்டுபாளையம்
இதேபோல் மேட்டுப்பாளை யம் நலவாழ்வு முகாமில் யானைகள் புடைசூழ பொங்கல் விழா கொண்டாட்டம் நடை பெற்றது. இவ்விழாவில் யானை பாகன்கள் மட்டுமே பங்கேற் கும் விளையாட்டு போட்டி கள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன.